/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆர்யவைஸ்ய மகா சபா சார்பில் அக்., 3 முதல் நவராத்திரி விழா
/
ஆர்யவைஸ்ய மகா சபா சார்பில் அக்., 3 முதல் நவராத்திரி விழா
ஆர்யவைஸ்ய மகா சபா சார்பில் அக்., 3 முதல் நவராத்திரி விழா
ஆர்யவைஸ்ய மகா சபா சார்பில் அக்., 3 முதல் நவராத்திரி விழா
ADDED : செப் 26, 2024 04:51 AM
சிவகங்கை: சிங்கம்புணரி வாசவி மகாலில் ஆர்யவைஸ்ய மகா சபா சார்பில் அக்., 3 முதல் 12 வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது.
இங்குள்ள வாசவி மகாலில் அக்., 3 அன்று காலை 7:00 மணிக்கு மேல் முகூர்த்தக்கால் ஊன்றி, சேவுகமூர்த்தி அய்யனார் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்க புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை கன்னிகா பரமேஸ்வரி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருள்வார்.
ஒவ்வொரு நாளும் அங்காள பரமேஸ்வரி, பெருமாள், வராகி அம்மன், மீனாட்சி, பிரித்யங்கரா தேவி அலங்காரத்திலும், அக்., 9 அன்று திருஞான சம்பந்தருக்கு அம்மன் ஞானப்பால் வழங்கிய நிகழ்ச்சி நடைபெறும். அக்., 10 அன்று பழனி முருகன் ராஜஅலங்காரத்தில், அக்., 11 ல் கொல்லுார் மூகாம்பிகா, அக்., 12 ல் சிவ பூஜை அலங்காரம் நடைபெறும்.
நவராத்திரி பூஜைகள் தினமும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறும். தினமும் காலை 11:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், அக்., 12 அன்று அம்புவிடுதல் நிகழ்வும் நடைபெறும். நவராத்திரி விழா ஏற்பாடுகளை ஆர்யவைஸ்ய மகாசபா தலைவர் வி.கணேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.