ADDED : ஜன 07, 2025 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை ராமச்சந்திர பூங்கா அருகே தே.மு.தி.க.,வினர் தமிழகஅரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
அண்ணா பல்கலை மாணவிக்கு எதிரான பாலியல் வண்கொடுமையை கண்டித்தும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத் தலைவர் அருணாகண்ணன், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானமுத்து, நகர செயலாளர் தர்மராஜ், அவைத் தலைவர் ராமு, மாநில பொதுக்குழு உறுப்பினர் தனசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.