/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வரத்து குறைந்த வேப்பங்கொட்டை விலை கிலோ ரூ.75 ஆக அதிகரிப்பு
/
வரத்து குறைந்த வேப்பங்கொட்டை விலை கிலோ ரூ.75 ஆக அதிகரிப்பு
வரத்து குறைந்த வேப்பங்கொட்டை விலை கிலோ ரூ.75 ஆக அதிகரிப்பு
வரத்து குறைந்த வேப்பங்கொட்டை விலை கிலோ ரூ.75 ஆக அதிகரிப்பு
ADDED : ஆக 16, 2025 02:34 AM
திருப்புவனம்: கடும் கோடை வெயில் காரணமாக வரத்து குறைந்ததால் வேப்பங்கொட்டைகள் கிலோ 60 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கிராமங்களில் கண்மாய் கரை, ரோடுகளில் வேப்ப மரங்கள் நிழலுக்காக வளர்க்கப்படுகின்றன. கடும் வறட்சியை தாங்கி வளரும் வேப்ப மரங்களில் ஏப்ரல், மே பூக்கள் பூக்க தொடங்கும். நன்கு வளர்ச்சி யடைந்த மரங்களில் பூக்கள் அதிகமாக இருக்கும்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பூக்க தொடங்கிய பின் ஜூன், ஜூலையில் பழங்கள் உருவாகி ஆடி காற்றில் பழங்கள் உதிரும், கிராமப்புறங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேப்பம்பழத்தை சேகரித்து அதன் விதையை எடுத்து உலர வைத்து விற்பனை செய்வார்கள். ஒரு மரத்தில் இருந்து ஐந்து முதல் பத்து கிலோ கொட்டை வரை கிடைக்கும்.
திருப்புவனத்தில் மொத்த வியாபாரிகள் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரும் வேப்பங்கொட்டைகளை வாங்கி விருதுநகர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர். கடந்தாண்டு கிலோ 60 ரூபாய் என விற்பனை செய்த நிலையில் தற்போது 75 ரூபாய் என வாங்குகின்றனர்.