/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் கமிஷனர் பணியிடமும் காலி திருமங்கலம் கமிஷனர் கூடுதல் பொறுப்பு
/
சிவகங்கையில் கமிஷனர் பணியிடமும் காலி திருமங்கலம் கமிஷனர் கூடுதல் பொறுப்பு
சிவகங்கையில் கமிஷனர் பணியிடமும் காலி திருமங்கலம் கமிஷனர் கூடுதல் பொறுப்பு
சிவகங்கையில் கமிஷனர் பணியிடமும் காலி திருமங்கலம் கமிஷனர் கூடுதல் பொறுப்பு
ADDED : ஆக 16, 2025 02:33 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி யில் பணிபுரிந்த கமிஷனர் கிருஷ்ணாராம் சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அலு வலக கண்காணிப் பாளராக மாற்றப்பட்ட நிலையில் சிவகங்கை நகராட்சியை திருமங்கலம் நகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூடுதல் பொறுப்பாக கவனிக்க நகராட்சி நிர்வாக இயக் குநர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது புதிதாக அருகில் உள்ள ஊராட்சியான வாணியங்குடி, காஞ்சிரங்கால் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகராட்சி யில் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள்ளது. நகராட்சியில் நடைபெறும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நகராட்சியில் நீண்ட நாட்களாக கட்டி முடிக்கப் பட்டு பயன்பாட்டிற்கு வராமல் தினசரி சந்தை, பஸ் ஸ்டாண்ட் கடைகள் உள்ளது.
நகராட்சியில் 6 மாதமாக மேலாளர் பணியிடம், இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. 3 மாதங்களாக சுகாதார அலுவலர் பணியிடம், இரண்டு சுகாதார ஆய்வாளர் பணியிடத்தில் ஒன்று காலியாக உள்ளது. 6 துாய்மை மேற்பார்வை யாளர் பணியிடத்தில் 3 காலியாக உள்ளன.
வருவாய் ஆய்வாளர் பணியிடமும் 3 பில் கலெக்டர் பணியிடமும் காலியாக உள்ளன. இதனால் நகரில் வரி வசூல் நகராட்சி கடைகளில் வாடகை வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர நகரமைப்பு ஆய்வாளர் பணியிடம், உதவிப் பொறியாளர் பணியிடம், 2 மேற்பார்வை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் நகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிப்பது, கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வது பாதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கு கமிஷனராக இருந்த கிருஷ்ணாராம் சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அலுவலக கண் காணிப்பாளராக மாற்றப்பட்டார். திருமங்கலம் நகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூடுதல் பொறுப்பு வகிக்க நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே நகராட்சியில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது கமிஷனர் பணியிடமும் காலியாக உள்ளது. மக்களின் புகார்களை தெரிவிப்பதற்கும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் அதிகாரிகள் இல்லாமல் அவதிப் படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.