/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நேமம் குடிநீர் ஊருணி சீரமைக்க வேண்டும்
/
நேமம் குடிநீர் ஊருணி சீரமைக்க வேண்டும்
ADDED : நவ 11, 2024 04:22 AM

காரைக்குடி: குன்றக்குடி அருகே நேமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் ஊராட்சியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நேமம் ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள செட்டியூரணி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. நேமம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் இந்த ஊருணி தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இச்சிறப்பு பெற்ற ஊருணி கடந்த சில மாதங்களாக பராமரிப்பின்றி, முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது.
மழை நீர் சேகரமாகும் ஊரணிக்கு வரும் கால்வாயும் மூடப்பட்டுள்ளன. எனவே அரசு, இந்த ஊருணிக்கு வரும் வரத்து கால்வாய்களை சீரமைப்பதோடு, ஊருணியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி, குடிநீர் ஆதாரமாக உள்ள ஊருணியை பாதுகாக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நேமம் ஊராட்சி தலைவர் சித்ரா கூறியதாவது: ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குளம், வரத்து கால்வாய் துார்வாரும் பணி நடந்து வுருகிறது. அடுத்தகட்டமாக குடிநீர் ஆதாரமான செட்டியூரணி வரத்து கால்வாய் துார்வாரப்படும், என்றார்.