/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடைகளில் தொடரும் நெட்ஒர்க் பிரச்னை: பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் வெயிலில் தவிப்பு
/
ரேஷன் கடைகளில் தொடரும் நெட்ஒர்க் பிரச்னை: பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் வெயிலில் தவிப்பு
ரேஷன் கடைகளில் தொடரும் நெட்ஒர்க் பிரச்னை: பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் வெயிலில் தவிப்பு
ரேஷன் கடைகளில் தொடரும் நெட்ஒர்க் பிரச்னை: பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் வெயிலில் தவிப்பு
UPDATED : மே 06, 2025 07:27 AM
ADDED : மே 06, 2025 06:57 AM

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.
இந்த கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, கோதுமை உள்ளிட்ட பல்வேறு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் இயந்திரங்களில் ஸ்மார்ட் கார்டுகளை வைத்து கைரேகையை பதிவு செய்து மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பயோ மெட்ரிக் இயந்திரத்தில் அடிக்கடி நெட்ஒர்க் பிரச்னை ஏற்படுவதால் பொருட்கள் வழங்க தாமதம் ஏற்படுகிறது. மேலும் ஆதார் பதிவின் போது கைரேகை பதியப்பட்டு பல ஆண்டு ஆவதால் ரேஷன் கார்டுகளை பதிவு செய்யும் போது ரேகை சரியாக பதிவாகாமல் விற்பனையாளர்கள் போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஒரு சில இடங்களில் விற்பனையாளர் பற்றாக்குறை காரணமாக ஒரு விற்பனையாளரே இரண்டு கடைகளை பார்க்க வேண்டியிருப்பதால் மாதத்திற்கு ஒரு கடையில் 10 நாட்கள் விற்பனை நடப்பதாக பெரிய விஷயமாக உள்ளது.
கடை எப்போது திறந்திருக்கும் என தெரியாமல் மக்கள் தினமும் வந்து ஏமாந்து செல்லும் நிலையும் ஏற்படுகிறது. காலை 9:00 மணி முதல் கடைகள்திறக்கப்பட்டிருக்கும் என அறிவிப்பு செய்யப்பட்டாலும் பெரும்பாலான கடைகள் காலை 10:00 மணி வரை திறப்பதே இல்லை.
பொருட்கள் இருந்தாலும் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்கும்அவல நிலை ஏற்பட்டுஉள்ளது.
மேலும் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் இல்லாத நிலையில் சேதமடைந்த வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது. பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. தற்போது கோடை வெயில் என்பதால் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:
பயோமெட்ரிக் இயந்திரத்தில் நெட்ஒர்க் பிரச்னை ஏற்படுவதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடங்களில் செயல்படும் கடைகளில் வெயில் காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வருவதால் கடைகளுக்கு முன் நிழற்கூரைகளும், குடிநீர் வசதியும் அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.