/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் புதிய வணிக வளாகம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
/
திருப்புத்துாரில் புதிய வணிக வளாகம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
திருப்புத்துாரில் புதிய வணிக வளாகம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
திருப்புத்துாரில் புதிய வணிக வளாகம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 28, 2024 06:38 AM
திருப்புத்துார் ; திருப்புத்துாரில் புதிய வணிக வளாகம், கலையரங்கம் கட்ட பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தலைவர் கோகிலாராணி நாராயணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெ.தனுஷ்கோடி, துணைத் தலைவர் கான் முகமது முன்னிலை வகித்தார்.
தீர்மானங்கள் மீது பேரூராட்சி கவுன்சிலர்கள் விவாதித்தனர். அனைத்து வார்டுகளிலும் கூடுதலாக தெரு விளக்குகள், விஸ்தரிப்பு பகுதிகளில் கூடுதல் மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு அமைக்கவும், புதிய குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக நிறைவேற்றவும், புதிய குடிநீர் இணைப்பிற்கு பொதுமக்கள் தவணை முறையில் டெபாசிட் செலுத்த அனுமதிக்கவும் கவுன்சிலர்கள் கோரினர்.
தீர்மானங்கள்
காந்தி சிலை அருகிலுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான ஐ.யூ.டி.பி. வணிக வளாகம் 40 ஆண்டுகளாகி விட்டதால் பழுதடைந்து விட்டது.
அவற்றை அகற்றி மூன்று தளங்களுடன் புதிய வணிக வளாக கட்டடம் கட்டவும், வார்டு 12ல் உள்ள சீரணி அரங்கம் பழுதடைந்து மக்களுக்கு பாதுகாப்பின்றி உள்ளதால் அதை இடித்து விட்டு புதிய கலையரங்கம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், துாய்மை இந்தியா 2.0, அம்ரூத் 2.0 திட்டங்களின் கீழ் மான்யநிதி பெற சொத்துவரி வசூலை அதிகரிக்கவும், ரூ 100க்கு கீழ் உள்ள சொத்து வரியினங்களிலும், வரி விதிக்கப்படாத இனங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.