/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் புதிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும்

ADDED : ஜூலை 22, 2025 03:47 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை அப்புறப்படுத்தி விட்டு அரசு சார்பில் புதிய இயந்திரம் பொருத்தும் பணி துவங்கியுள்ளது,
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனியார் பராமரிப்பில் இருந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மார்ச் 18ல் பழுதானது.இதனால் அவசர சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற் பட்டது. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பழுதால் அவசர நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் தனியார் ஸ்கேன் சென்டருக்கும் அனுப்பபட்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் தனியார் நிறுவன ஒப்பந்தக் காலம் முடிவடைந்தது. அதை நீட்டிப்பு செய்யாததால் தனியார் நிறுவனம் அந்த இயந் திரத்தை எடுத்துச்சென்றது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அரசு சார்பில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பொருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இருந்த நிலையில் அரசு சார்பில் சிவகங்கை மருத்துவ மனையில் புதிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பொருத்தும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
இந்த பணி 2 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது. செப். மாதம் முதல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பயன்பாட்டிற்கு வரும்.