sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நல்லாண்டிபுரத்தில் புதிய துணை மின் நிலையம்; கிடப்பில் கிடக்கும் திட்டம் அமலுக்கு வருமா

/

நல்லாண்டிபுரத்தில் புதிய துணை மின் நிலையம்; கிடப்பில் கிடக்கும் திட்டம் அமலுக்கு வருமா

நல்லாண்டிபுரத்தில் புதிய துணை மின் நிலையம்; கிடப்பில் கிடக்கும் திட்டம் அமலுக்கு வருமா

நல்லாண்டிபுரத்தில் புதிய துணை மின் நிலையம்; கிடப்பில் கிடக்கும் திட்டம் அமலுக்கு வருமா


ADDED : ஜூலை 22, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை; மானாமதுரை,இளையான்குடியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட துணை மின் நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்ய நல்லாண்டிபுரத்தில் விரைவில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மானாமதுரை நகர், சுற்றுவட்டார கிராம மக்கள் மின் தேவையை பூர்த்தி செய்ய 45 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.

நகர் மற்றும் ஊரகம்,ராஜகம்பீரம் மின் தொகுப்பிலிருந்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இதேபோன்று இளையான்குடியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இளையான்குடியில் துணை மின் நிலையம் ஏற்படுத்தப்பட்டு இளையான்குடி நகர், ஊரகம் மற்றும் சாலைக்கிராமம் மின் தொகுப்பிலிருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வணிக நிறுவனங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த இரண்டு ஊர்களிலுள்ள துணை மின் நிலையங்கள் அப்போது இருந்த வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை கணக்கில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது.

தற்போது மானாமதுரை, இளையான்குடியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் புதிதாக துவங்கி உள்ள நிலையில் பழைய துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுவதால் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின்விநியோகம் செய்ய முடியாத நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

கீழநெட்டூர் விவசாயி பாலமுருகன் கூறியதாவது: மானாமதுரை, இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் பல விவசாயிகள் இலவச மின்சாரம் வைத்து பம்ப் செட் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் விவசாய தேவைக்கு மும்முனை மின்சாரம் விநியோகம் செய்வது அடிக்கடி தடைபட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது மானாமதுரை அருகே நல்லாண்டிபுரத்தில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

தற்போது வரை அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மின் பழுதை சரி செய்யவும் ஊழியர்கள் இல்லை.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களை புதுப்பிப்பதோடு மட்டுமில்லாமல் நல்லாண்டிபுரத்தில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us