/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருத்தளிநாதர் கோயிலில் புதிய வாகன வெள்ளோட்டம்
/
திருத்தளிநாதர் கோயிலில் புதிய வாகன வெள்ளோட்டம்
ADDED : ஏப் 17, 2025 05:35 AM

திருப்புத்துார்: குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக விழாவில் ௨வது நாள் மண்டகபடி வட்டார யாதவ உறவின்முறை அறக்கட்டளையினரால் நடந்து வருகிறது. அதில் இரவில் சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா நடைபெறும். அதற்காக மரத்திலான வாகனங்களை மண்டகபடிதாரர்கள் செய்துள்ளனர். ரூ 4 லட்சம் மதிப்பில் சுவாமிக்கு கற்பகவிருட்சமும், அம்பாளுக்கு காமதேனு வாகனமும் மரசிற்பி மயிலாடுதுறை பன்னீர்தாசால் தயாரிக்கப்பட்டது.
நேற்று மாலை திருத்தளிநாதர் கோயில் திருநாள் மண்டபம் அருகில் புதிய வாகனங்களில் கலசங்கள் வைத்து சிவாச்சார்யார்களால் பூஜை நடந்தது. பின்னர் சப்பரத்தில் வாகனங்கள் வைத்து தேரோடும் வீதியில் வலம் வந்தது. தொடர்ந்து வாகனங்கள் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.