/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் தற்கொலை
/
தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் தற்கொலை
ADDED : அக் 23, 2025 04:12 AM
சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே குன்னத்துார் களத்துப்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகள் ரூபியா 21. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டியை சேர்ந்த பாண்டி 30, என்பவருக்கும் ஜூலை 1 ல் திருமணம் நடந்தது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
தலை தீபாவளியை கொண்டாட அக். 19 ல் இருவரும் களத்துப்பட்டி வந்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் முடிந்து நேற்று காலை பாண்டி ஊருக்கு கிளம்பியுள்ளார். இன்னும் சில நாள் தந்தை வீட்டில் இருந்து விட்டு செல்லலாம் என்று ரூபியா கூறிய நிலையில், தான் பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறி பாண்டி சென்று விட்டார். தனது பேச்சை கேட்காமல் சென்று விட்டாரே என்ற கோபத்தில், ரூபியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆகி 3 மாதத்தில் இறந்ததால் தேவகோட்டை ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.