/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பாதாள சாக்கடையால் விபத்து
/
சிவகங்கையில் பாதாள சாக்கடையால் விபத்து
ADDED : அக் 23, 2025 04:11 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி அருகே மேம்பால சர்வீஸ் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி பல இடங்களில் திறந்து காணப்படுகிறது. இரவில் வாகனங்களில் வருவோர் இதில் சிக்கும் அபாயம் உள்ளது.
சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 3 கட்டங்களாகப் பணிகள் நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தெருவின் மையப்பகுதியில் ஆள்நுழைவு குழி அமைக்கப்பட்டு அது மூடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக இது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரோட்டின் மையப்பகுதியில் உள்ள இந்த ஆள் நுழைவிற்காக அமைக்கப்பட்ட குழியின் மூடி திறந்தே உள்ளது. சில இடங்களில் ரோட்டை விட மேடாக அமைக்கப்பட்டுள்ளதாலும் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தற்போது மழை பெய்துள்ளதால் பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. நகராட்சி அலுவலகம் அருகே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் பாதாள சாக்கடை குழி மூடி முழுவதும் சேதம் அடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.