/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை: சி.பி.ஐ., தகவல்
/
பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை: சி.பி.ஐ., தகவல்
பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை: சி.பி.ஐ., தகவல்
பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை: சி.பி.ஐ., தகவல்
ADDED : ஆக 09, 2025 02:10 AM
திருப்புவனம்:மடப்புரத்தில் நகையை இழந்த கல்லுாரி பேராசிரியை நிகிதாவின் கார் பார்க்கிங்கை விட்டு வெளியே வேறு எங்கும் செல்லவே இல்லை என சி.பி.ஐ.,விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவகங்கைமாவட்டம் மடப்புரத்திற்கு ஜூன் 27ல் சுவாமி கும்பிட வந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதாவின் காரில் இருந்த நகை திருட்டு சம்பந்தமான விசாரணையில் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, உயிரிழந்தார்.
ஜூன் 27 காலை 9:30 மணிக்கு கோயிலுக்கு வந்த நிகிதா காரை பார்க் செய்து தருமாறு அங்கிருந்த கோயில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமாரிடம் கூறி சாவியை கொடுத்துள்ளார்.
அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் அருணிடம் சாவியை அஜித்குமார் கொடுத்தார் .காரை கோயில் எதிரே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு இரண்டு நிமிடத்தில் சாவியை நிகிதாவிடம் அஜித்குமார் கொடுத்து விட்டார். ஆனால் நிகிதா கொடுத்த புகாரில் கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தந்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும் காரை அஜித்குமாரும் அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் அருணும் சேர்ந்து வடகரை வரை ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகளும் முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்து தான் தொடங்கினர்.
வழியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்த்தபோது கார் வந்ததாக தெரியவில்லை. இதனிடையே காரை நிகிதாவே ஓட்டி சென்று, மீண்டும் அவரே ஓட்டி வருவது பதிவாகி இருந்தது.
நிகிதாவின் காரை மடப்புரம் கோயில் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு இரண்டு நிமிடத்தில் சாவியை ஒப்படைத்துள்ளனர்.
மீண்டும் பார்க்கிங்கில் இருந்து காரை எட்டு நிமிடத்தில் எடுத்து வந்து கொடுத்துள்ளனர்.
எனவே கோயிலுக்கு நிகிதா காரில் வந்த பின் கோயிலை விட்டு கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.