/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் மகா சண்டிேஹாமம்
/
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் மகா சண்டிேஹாமம்
ADDED : ஆக 09, 2025 03:24 AM

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் மகா சண்டி ேஹாம பூஜை நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து அன்று மாலை முதல்கால ேஹாம பூஜை நடந்தது. நேற்று காலை 10:25 மணிக்கு கோ பூஜையுடன் சண்டிஹோம யாகங்களை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
நேற்று மதியம் 12:30 மணிக்கு பூர்ணாஹூதியும், அதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மனுக்கு மூலாலய அபிேஷகம் நடந்தது.
நேற்று இரவு 7:00 மணிக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கண்ணுடைய நாயகி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், வேல்முருகன், கணபதிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று கண்ணுடைய நாயகி அம்மன் அலங்காரத்தில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்.