/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வயசும் இல்லை, ஆவணமும் இல்லை: டூவீலரில் சுமைகளுடன் சிறுவர்கள்
/
வயசும் இல்லை, ஆவணமும் இல்லை: டூவீலரில் சுமைகளுடன் சிறுவர்கள்
வயசும் இல்லை, ஆவணமும் இல்லை: டூவீலரில் சுமைகளுடன் சிறுவர்கள்
வயசும் இல்லை, ஆவணமும் இல்லை: டூவீலரில் சுமைகளுடன் சிறுவர்கள்
ADDED : ஜன 18, 2024 06:01 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் சிறுவர்கள் பலரும் உரிய ஆவணங்கள், உரிமம் இன்றி டூவீலரில் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.
திருப்புவனம் நகரில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மதுரை நகருக்கு அருகாமையில் திருப்புவனம் அமைந்திருப்பதால் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக நாளுக்கு நாள் இங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பலரும் தங்களது தேவைகளுக்காக வீடுகள் தோறும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இருசக்கர வாகனங்களை பெற்றோர்கள் பலரும் சிறுவர் சிறுமியர்கள் பயன்படுத்த அனுமதிக்கின்றனர்.
கடைகள் உள்ளிட்டவற்றிற்கு சிறுவர்கள் பலரும் டூவீலர்களில் வேகமாக பயணம் செய்கின்றனர். போக்குவரத்து விதிகள் ஏதும் தெரியாமல்வாகனங்களில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து நேரிட்டு வருகின்றன.
நேற்று திருப்புவனத்தில் சிறுவர்கள் இருவர் பழைய இரும்பு டேபிள்களை டூவீலரில் வைத்து விபத்து ஏற்படும் வகையில் வேகத்தில் சென்றது அச்சத்தை ஏற்படுத்தியது. போலீசார் சிறுவர்களிடம் இருசக்கர வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.