/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலவச தையல் இயந்திரம் வழங்காமல் அலைக்கழிப்பு! முதல்வரிடம் மனு அளித்தும் பயனில்லை
/
இலவச தையல் இயந்திரம் வழங்காமல் அலைக்கழிப்பு! முதல்வரிடம் மனு அளித்தும் பயனில்லை
இலவச தையல் இயந்திரம் வழங்காமல் அலைக்கழிப்பு! முதல்வரிடம் மனு அளித்தும் பயனில்லை
இலவச தையல் இயந்திரம் வழங்காமல் அலைக்கழிப்பு! முதல்வரிடம் மனு அளித்தும் பயனில்லை
ADDED : பிப் 05, 2025 10:02 PM

சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்ட, மிக பிற்பட்ட, சிறுபான்மையின பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற அவர்கள் வீட்டில் இருந்தபடியே பொருளாதாரம் ஈட்டும் நோக்கில், தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக உரிய பயிற்சி பெற்ற சான்றுடன், வருவாய், ஜாதி, இருப்பிட சான்றுடன் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இலவச தையல் இயந்திரம் கேட்டு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பல ஆண்டுகளான நிலையில், பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்காமல், விளக்கம் கேட்க செல்லும் சிறுபான்மையின பெண்களை அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் இந்த அரசு, ஏழை, நடுத்தர குடும்ப பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
முதல்வரிடம் மனு அளித்து பயனில்லை
சிவகங்கை, இந்திராநகர் எம்.ஷாஜஹான் கூறியதாவது, 2022 ம் ஆண்டு திருப்புத்துார் அருகே வைரவன்பட்டியில் முதல்வர் ஸ்டாலின், புகார் பெட்டி வைத்து அதில் புகார் அளித்தால் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். அந்த பெட்டியில் தான் இலவச தையல் இயந்திரம் கேட்டு, என் மனைவி யாஸ்மின் மனு போட்டிருந்தார்.
முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இது குறித்து விசாரித்ததோடு, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள கூறினர். 2022 ம் ஆண்டில் இருந்து கலெக்டரிடம் பல முறை இலவச தையல் இயந்திரம் கேட்டு மனு செய்தும், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள், எங்களை அலைக்கழிப்பு செய்கின்றனர், என்றார்.
பதில் தர மறுத்த அதிகாரி
மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணியிடம், இது வரை எத்தனை தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மனு அளித்தவர்கள் எத்தனை பேர் என கேட்க அலுவலகத்திற்கு சென்றபோது, பதில் கூற மறுத்து விட்டார்.