/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேட்பு மனு தாக்கல் துவக்கம் முதல் நாள் யாரும் வரவில்லை
/
வேட்பு மனு தாக்கல் துவக்கம் முதல் நாள் யாரும் வரவில்லை
வேட்பு மனு தாக்கல் துவக்கம் முதல் நாள் யாரும் வரவில்லை
வேட்பு மனு தாக்கல் துவக்கம் முதல் நாள் யாரும் வரவில்லை
ADDED : மார் 21, 2024 01:58 AM

சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தேர்தலில் போட்டியிட முதல் நாளான நேற்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இத்தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 16 லட்சத்து 22 ஆயிரத்து 574 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
ஏப்., 19 ல் நடக்கும் ஓட்டுப்பதிவிற்காக நேற்று முதல் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆஷா அஜித் வேட்பு மனு பெற்று வருகிறார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல் நாளான நேற்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இங்கு, (சனி, ஞாயிறு தவிர்த்து) மற்ற நாட்களில் மார்ச் 27 வரை காலை 11:00 முதல் மதியம் 3:00 மணிக்குள் வேட்பு மனு பெறப்படும். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் உள்ளிட்ட போலீசார் நுழைவு வாயில், கலெக்டர் அலுவலக பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோரிடம் போலீசார் பரிசோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

