/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை வாங்க வருவதில்லை; கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
குப்பை வாங்க வருவதில்லை; கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : நவ 23, 2024 06:30 AM
தேவகோட்டை; தேவகோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் தாமரை முன்னிலை வகித்தார்.
நடந்த விவாதம்:
பாலமுருகன் ( தி.மு.க.): அனைத்து வார்டு கழிவுகளும் மேல கண்மாயில் சேர்கிறது. கண்மாய் கால்வாய் சேதமடைந்துள்ளது.
வடிவேல் முருகன் (அ.தி.மு.க.) : வாரத்திற்கு ஒரு முறை தான் குப்பை வாங்குகிறார்கள். நகரில் ரோட்டோரம் புதுப்புது கடை ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
ரமேஷ்.(து.த): வணிக நிறுவனங்களின் கழிவுகளை வாங்குவதில்லை. கோழி கழிவுகளை பள்ளி அருகே கொட்டுகிறார்கள்.
அய்யப்பன் (அ.தி.மு.க): அனுமதியின்றி ரோட்டை உடைக்கிறார்கள்.
அகிலாகுமாரி (அ.தி.மு.க.): 350 பேர் வசிக்கும் குடியிருப்பில் உள்ள பெண்கள் கழிப்பறையில் கதவு இல்லை. விளக்கு இல்லை. செப்டிக் டேங்க் சேதமடைந்து இருந்தது. சுகாதார அலுவலர் அதை சரி செய்யாமல் மண்ணை போட்டு மூடி விட்டார்.
கமிஷனர்: குப்பை அள்ள நவீன வாகனங்களை பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் சரியாக செய்யாததால் தேங்கி நிற்கிறது. மாடுகள் வளர்க்கும் இடங்களில் நோட்டீஸ் கொடுத்து உள்ளோம். மாடுகளை பிடித்து பாதுகாக்க புல்வெளியுடன் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தலைவர்: நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 58 லட்ச ரூபாய் செலவில் நகரில் 128 கேமரா பொருத்த திட்டமிட்டு 90 சிசி டிவி கேமரா பொருத்தி உள்ளோம்.
அதிகாரிகள் பணிக்கு செல்லும் போது கவுன்சிலர்களுக்கு தெரிய படுத்த வேண்டும். கொசு மருந்து இரண்டு வேளை அடிக்கப்படும் என்றார்.

