/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாய் பெருக்கத்தால் தொல்லை கருத்தடை மையத்தால் 'நோ யூஸ்'
/
நாய் பெருக்கத்தால் தொல்லை கருத்தடை மையத்தால் 'நோ யூஸ்'
நாய் பெருக்கத்தால் தொல்லை கருத்தடை மையத்தால் 'நோ யூஸ்'
நாய் பெருக்கத்தால் தொல்லை கருத்தடை மையத்தால் 'நோ யூஸ்'
ADDED : ஜூலை 12, 2025 04:07 AM

தேவகோட்டை : தேவகோட்டை நகரில் நாளுக்கு நாள் நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. ஒரு நாய்க்கு ரூ 500 வரை செலவழிக்கப்பட்டது.நாய்கள் குறைவதற்கு பதிலாக இனப்பெருக்கம் அதிகமானது.
இதன் காரணமாக தொடர்ந்து நாய்களுக்கு கருத்தடை செய்வதை நகராட்சி நிறுத்தியது. தற்போது மீண்டும் அதிகளவில் நாய் பெருக்கம் உள்ளது.
நாய்கள் அதிகரித்து வரும் நிலையில் தேவகோட்டை நகராட்சி சார்பில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் கருத்தடை மைய கட்டடம் கட்டி பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடியே கிடக்கிறது.
நாய்களுக்கு கருத்தடை செய்தாலும் கருத்தடை செய்த பின் மருந்து கொடுத்து ஓரிரு தினங்களாவது பராமரிக்க மருத்துவ உதவியாளர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.
கருத்தடை மையத்தை சுற்றி முட்புதர்கள் மண்டி உள்ள நிலையில் நகராட்சி தலைவர், கமிஷனர் சம்பந்தப்பட்ட மையத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.