/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில்களில் செயல்படாத ‛சிசிடிவி' கேமராக்கள்
/
கோயில்களில் செயல்படாத ‛சிசிடிவி' கேமராக்கள்
ADDED : நவ 22, 2024 04:23 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில் பக்தர்கள், பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. முக்கிய இடங்கள், சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ஏற்கனவே பொருத்தப்பட்ட இடங்களில் அவை முறையாக செயல்படவில்லை.
குறிப்பாக ஒரு சில கோயில்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் உண்டியல் திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கோயில் ஒன்றில் உண்டியல் எண்ணும் போது உண்டியலுக்குள் ரூபாய் நோட்டை திருடுவதற்கான கம்பியும் கிடந்துள்ளது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மர்ம நபர்கள் கோயில்களை நோட்டமிட்டு, வலம் வருவது தெரிய வந்துள்ளது.
நகரில் முக்கிய சந்திப்புகளில் கேமரா அமைப்பது தொடர்பாக எந்த ஒரு திட்டமிடலும் பேரூராட்சி நிர்வாகத்திடம், போலீசாரிடம் இல்லாததால் பொதுமக்களும் பக்தர்களும் அச்சத்தில் உள்ளனர்.