/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் வளாகத்தில் செயல்படாத கழிப்பறை
/
கோயில் வளாகத்தில் செயல்படாத கழிப்பறை
ADDED : மே 16, 2025 03:13 AM
பிரான்மலை: பிரான்மலையில் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட கழிப்பறை பூட்டிக்கிடப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இங்குள்ள மங்கைபாகர் தேனம்மை வடுக பைரவர் கோயில் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டப்பட்டது.
கட்டப்பட்டதில் இருந்து கழிப்பறை பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.
ஒரு சில நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு திறந்து விடப்படுகிறது. கடந்த வாரம் பத்து நாட்கள் கோயில் திருவிழா நடைபெற்று ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்து சென்ற போதும் இக்கழிப்பறை திறக்கப்படவில்லை.
கழிப்பறையை பூட்டி சாவி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கழிப்பறையை திறந்து வைத்து பராமரிக்க ஆட்கள் பற்றாக்குறையால் எப்போதும் பூட்டியேகிடக்கிறது. கழிப்பறையை நிர்வகிக்க ஆட்களை நியமித்து முழு நேரமும் திறந்து இருக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.