/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயப் பணியில் வட மாநில இளைஞர்கள்
/
விவசாயப் பணியில் வட மாநில இளைஞர்கள்
ADDED : ஆக 21, 2025 06:59 AM

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள வேலங்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் நடக்கும் விவசாய பணியில் வட மாநில இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மானாவாரி விவசாயமே அதிக அளவில் நடைபெறும் இப்பகுதியில், ஆடி பட்ட விதைப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடவில்லை.
மழையை நம்பியே விவசாயம் நடைபெறுவதால், ஐப்பசி மாதத்திலேயே விதைப்பில் ஈடுபடுவர். போர்வெல் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள், கோடை விவசாயம் உட்பட இரு போக விவசாயம் செய்கின்றனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாய பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் பெரும்பாலானோர் விவசாய பணியையே கைவிடும் சூழல் நிலவி வருகிறது.
தற்போது விவசாய பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். உழவு செய்தல், நடுதல், அறுவடைப்பணி என அனைத்து பணிகளிலும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
வடமாநில பணியாளர்கள் கூறுகையில், பீஹாரிலிருந்து இங்கு வேலைக்காக வந்தோம். வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் புதுவயல் பள்ளத்தூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் கட்டட வேலை மற்றும் அரிசி ஆலைகளில் வேலை செய்து வருகின்றனர். எங்கள் ஊரிலும் விவசாய பணி செய்தோம். அதனால், பிற பணிகளை விட விவசாயப் பணியை அதிக ஆர்வத்துடன், ஈடுபாட்டுடனும் செய்கிறோம்.