ADDED : ஜூன் 10, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் வைகாசி தெப்ப விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 15 காளைகள், 135 வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் அடங்க மறுத்த காளைக்கும் அடக்கிய வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாடு முட்டியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.