/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நோட்டீஸ் ஊருணி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் கோர்ட் உத்தரவிட்டும் பணியில் தொய்வு
/
நோட்டீஸ் ஊருணி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் கோர்ட் உத்தரவிட்டும் பணியில் தொய்வு
நோட்டீஸ் ஊருணி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் கோர்ட் உத்தரவிட்டும் பணியில் தொய்வு
நோட்டீஸ் ஊருணி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் கோர்ட் உத்தரவிட்டும் பணியில் தொய்வு
ADDED : பிப் 04, 2024 04:42 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நல்லாகுளம் ஊருணி ஆக்கிரமிப்புகளை 7 நாட்களுக்குள் அகற்ற பேருராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இப்பேரூராட்சியின் மையப் பகுதியில் 5 ஏக்கர் பரப்பில் நல்லாகுளம் ஊருணி உள்ளது. இதில் பலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அவ்வப்போது கோரிக்கை வரும்போது மட்டும் வருவாய்த் துறையினர் ஊருணியை அளவீடு செய்வதும் நோட்டீஸ் கொடுப்பதுமாக இருந்து வருகின்றனர்.
15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய் துறை அலட்சியமாக செயல்படுவதாக நீர்நிலை ஆர்வலர்கள் புகார் கூறினர்.
இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து நகரில் அனைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜன. 24 ம் தேதி மீண்டும் நல்லாகுளம் ஊருணியின் எல்லைகளை டி.ஜி.பி.எஸ்., கருவி மூலம் அளவீடு செய்தனர். ஆனால் மாற்று வீடுகள் இல்லாதோர்க்கு வீட்டுமனை ஒதுக்க தாமதம் ஆனதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிப்போனது.
ஓராண்டுக்கு பின்னர் தற்போது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில் அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்கவே அதிகாரிகள் அவ்வப்போது கண்துடைப்புக்காக நோட்டீஸ்களை அனுப்புவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இந்த முறை உறுதியாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாற்று வீடு இல்லாத ஆக்கிரமிப்பாளர்களுக்கு வடக்குவேளார் தெரு பாலாற்றங்கரையில் வீட்டுமனை வழங்க முடிவுசெய்திருந்த இடத்தை வேறு உபயோகத்துக்கு மாற்றக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.