ADDED : அக் 29, 2024 05:12 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை தமிழவைய வாசிப்பு வட்டத்தில் முதல் நிகழ்வாக வயநாடு எனும் கவிதை நுால் அறிமுக விழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
நாட்டரசன்கோட்டை அகை ஆதிரை நாட்டியப் பள்ளி மாணவிகள் தமிழ் போற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர் கற்பகம் வரவேற்றார். மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்சுந்தரராஜன் தலைமை வகித்தார். வித்யா கணபதிமுன்னிலை வகித்தார். புலவர் காளிராசா வயநாடு கவிதை நுால் குறித்து அறிமுக உரை பேசினார்.
த.மு.எ.க.ச., மாவட்டதலைவர் தங்கமுனியாண்டி, விரிவுரையாளர்மணிமாறன், தமிழ்க்கனல் பேசினர். நுாலாசிரியர் கவிஞர் மகாபிரபு ஏற்புரை பேசினார். சகுபர்நிஷா பேகம் நிகழ்ச்சியைதொகுத்து வழங்கினார். சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
