ADDED : மார் 25, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நுால் அறிமுக விழா நடந்தது.
மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்சுந்தரராஜன் தலைமை வகித்தார். வித்யா முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜெயபிரியா வரவேற்றார். ஆசிரியர் பாலமுருகன் எழுத்தாளர் முகில் எழுதிய நீ இன்றி அமையாது உலகு எனும் கட்டுரை நுாலை அறிமுகம் செய்துவைத்தார். புதுக்கவிதைகளோடு குறுந்தொகை பாடல்களை ஒருங்கிணைத்து காளிராசா பேசினார்.
எழுத்தாளர் ஈஸ்வரன்,முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்சங்கரசுப்பிரமணியன், ஆசிரியர்கள் லோகமித்ரா, ராஜலட்சுமி பங்கேற்றனர்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.