நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நுாலகம் மற்றும் அறிவு சார் மைய புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷாஅஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழா மேடை அருகே சாக்கடை ஓடியது. இதனை மறைக்க பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் துர்நாற்றத்தை மறைக்க முடியவில்லை. துர்நாற்றத்தை போக்க திறந்த வெளி மேடையில் தொடர்ந்து லெமன் ஸ்பிரேவை நகராட்சி ஊழியர்கள் அடித்தனர்.
இதனால் விழா மேடை முழுவதும் லெமன் ஸ்பிரே வாசனை அடித்தது. தற்காலிகமாக லெமன் ஸ்பிரே அடித்தாலும், நாளை நுாலகத்திற்கு வரும் மாணவர்கள் துர்நாற்றத்தில் இருந்து விடுபட நிரந்தர தீர்வு காண வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து சென்றனர்.