/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு சிவகங்கை
/
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு சிவகங்கை
ADDED : ஏப் 27, 2025 07:25 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கலாராணி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஜெயபாரதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
மாவட்ட செயலாளர் லதா வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் கற்பகவள்ளி வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாநில துணைத் தலைவர் பாண்டிச்செல்வி சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க லுாயிஸ் ஜோசப்பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் கோமதி நன்றி கூறினார்.