/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சத்துணவு அங்கன்வாடி ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
/
சத்துணவு அங்கன்வாடி ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
சத்துணவு அங்கன்வாடி ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
சத்துணவு அங்கன்வாடி ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
ADDED : டிச 28, 2025 05:33 AM
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. ஓய்வூதியர் சங்க மாவட்டத்தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் சங்கரநாராயணன், மாநில பொதுச்செயலாளர் வாசுகி, மாநில துணைத்தலைவர் மிக்கேலம்மாள், மாநில ஆலோசகர் அயோத்தி கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான காலமுறை ஊதியம், பணிக்கொடை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.7 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது தொடர்ச்சியாக மாவட்ட தலைநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.