/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிணற்றில் விழுந்த காட்டு மாடுகள் மீட்பு
/
கிணற்றில் விழுந்த காட்டு மாடுகள் மீட்பு
UPDATED : மார் 02, 2024 04:47 PM
ADDED : மார் 02, 2024 02:02 PM
சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் அருகே கிணற்றில் விழுந்து போராடிய காட்டு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஒன்றியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வாழும் காட்டு மாடுகள் இரவு நேரங்களில் அடிவாரத்தில் உள்ள வயல் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி இரவு குன்னத்தூர் கிராம பகுதிக்குள் நுழைந்த காட்டு மாடுகள் கூட்டம் அங்கிருந்த பயிர்களை தின்று நாசம் செய்தது. அதில் இரண்டு மாடுகள் சண்டையிட்டு கொண்டு அருகே பஞ்சவர்ணம் என்பவரது கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில் மாடுகள் வெளியேற முடியாமல் தத்தளித்தன. தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் கயிறு மூலம் மாடுகளை மீட்க முயன்றனர் ஆனால் முடியவில்லை. இதை தொடர்ந்து மண் அள்ளும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கிணற்றிலிருந்து பாதை தோண்டப்பட்டது. அதன் வழியாக இரண்டு காட்டு மாடுகளும் மீட்கப்பட்டன. திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், எஸ் புதூர் வனவர் சக்திவேல், பிரான்மலை வனவர் உதயகுமார், சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்

