/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பார்மலின் கலந்து கெட்டுப்போன மீன்கள் விற்பனை; கண்காணிக்காத அதிகாரிகள்

ADDED : ஆக 25, 2025 05:47 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வாங்கி வரப்படும் மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பார்மலின் தடவி பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி, மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து அதிகளவில் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க, ஐஸ் பார்களில் பார்மலின் தடவி பதப்படுத்தி விற்கின்றனர். பெரும்பாலான வியாபாரிகள், நல்ல மீன்களுடன், பார்மலின் கலந்த கெட்டுப்போன மீன்களை கலந்து விற்பனை செய்கின்றனர்.
இது போன்ற மீன்களை வாங்கி சாப்பிடுவோருக்கு உடல் உபாதைகள், நோய் பரவுவதாக புகார் எழுந்துள்ளது.
இதை, மாநகராட்சி, நகராட்சி சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.