/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாயில் தண்ணீர் வராததை கண்டித்து 5 கிராம மக்கள் மறியல் செய்ய முயற்சி சமாதானப்படுத்தினர் அதிகாரிகள்

ADDED : நவ 07, 2025 02:00 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே மிளகனுார் உள்ளிட்ட ஐந்து கண்மாய்களுக்கான கால்வாயில் தண்ணீர் வராததால் கிராம மக்கள் மறியல் செய்ய முயற்சித்தனர். அதிகாரிகள் அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனுார், சீனிமடை, கஞ்சிமடை, நாராயணதேவன்பட்டி, ராமனேந்தல் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய்கள் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இக்கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வர அன்னியேந்தல் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வலது பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில் மதகணையில் தலைமதகு படுகை மட்டும் உயரமாக இருப்பதால் மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதில்லை.
இப்பகுதி பயிர்கள் கருகி வருவதாக கூறி 5 கிராம மக்கள் அன்னியேந்தல் அருகே மதுரை-- ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மறியல் செய்ய கூடினர். மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர்கள் அமர்நாத்,அழகுராஜா, டி.எஸ்.பி.,பார்த்திபன் ஆகியோர் கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் வரும் மார்ச் மாதத்திற்குள் உயரமாக இருக்கும் தலை மதகு படுகை மட்டத்தை குறைக்கும் வரை வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போது மிளகனுார் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.