/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : அக் 24, 2024 05:14 AM
சிவகங்கை: திருப்புவனத்தில் 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்புவனம் பகுதியைசேர்ந்தவர் ராஜா 62. இவர் 2020 ஆக.17 தனது வீட்டில் குடியிருந்த சிறுமியை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமியின் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார்.
குற்றவாளி ராஜாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.