நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே விளாங்காட்டூர் சூரசங்கு 77. இவரது மனைவி அழகம்மாள் 67. 15 நாட்களுக்கு முன்பு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன் பிறகு அழகம்மாள் மன அழுத்தத்தில் இருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது வீட்டின் சுவர் இடிக்கப்பட்டது. மன அழுத்தம் அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே துாக்கிட்டு இறந்தார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.