/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கையுந்து பந்து போட்டியில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளி முதலிடம்
/
கையுந்து பந்து போட்டியில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளி முதலிடம்
கையுந்து பந்து போட்டியில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளி முதலிடம்
கையுந்து பந்து போட்டியில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளி முதலிடம்
ADDED : ஆக 04, 2025 04:11 AM
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கையுந்து பந்து போட்டியில் காளையார்கோவில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளி முதலிடம் பிடித்தது.
சிவகங்கை அருகே சுந்தரநடப்பில் மாவட்ட அளவில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான வயது 14, 17 மற்றும் 19 பிரிவு போட்டிகளில் கையுந்து பந்து போட்டிகளில் விளையாடினர். இதில், காளையார் கோவில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வயது 14 மற்றும் 17 பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் கல்பனா, உடற்கல்வி ஆசிரியர் ஆல்வின் அந்தோணி, கவிசித்ரா ஆகியோர் பாராட்டினர்.
திருப்புத்துார்: தென்கரை மவுன்ட் சீயோன் சில்வர் ஜுபிலி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றனர்.
இப்பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியில் வயது 12, 14, 17 மற்றும் 19 வயதினருக்கான போட்டிகள் நடந்தது. இப்பள்ளி மாணவர்கள் வயது 12 மற்றும் வயது 17 ஆகிய இரு பிரிவுகளில் விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.