/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகனங்கள் மோதல் தகராறு வழக்கில் ஒருவர் கைது
/
வாகனங்கள் மோதல் தகராறு வழக்கில் ஒருவர் கைது
ADDED : பிப் 17, 2024 05:03 AM
தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள தச்சவயல் குடியிருப்பைச் சேர்ந்த கருப்பன் மகன் சந்திரன்49, தற்போது தேவகோட்டை நகரில் அண்ணாசாலை வடக்கில் வசித்து வருகிறார்.
கடந்த நவ.18ல் ராம்நகர் அருகே உள்ள இடத்தில் வேனில் கற்கள், இரும்பு பொருட்கள் இறக்கிவிட்டு திரும்பி வந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் மீது மோதி உள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மாந்தோப்பில் வசிக்கும் கூனவயல் சேகர் 48., சந்திரனை திட்டி தாக்கியுள்ளார். கோர்ட்டில் மனு செய்ததை தொடர்ந்து கோர்ட் உத்தரவுப்படி ஜன.23ம் தேதி சேகர், ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி நேற்று சேகரை கைது செய்தார்.