/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேன் மீது டூவீலர் மோதி ஒருவர் பலி
/
வேன் மீது டூவீலர் மோதி ஒருவர் பலி
ADDED : நவ 08, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் சரக்கு வேன் மீது டூ வீலர் மோதியதில் அரசு பஸ் கண்டக்டர் இறந்தார்.
திருப்புத்துார் தம்பிபட்டி முத்துராமன் மகன் ஸ்டாலின் பிரபாகரன்48. காரைக்குடி அரசு போக்குவரத்து கழக கண்டக்டரான பணியாற்றுகிறார். ஓய்வு நாளான நேற்று முன்தினம் அவர் மதியம் 1:00 மணி அளவில் டூ வீலரில் திருப்புத் துாரிலிருந்து தம்பி பட்டிக் சென்று கொண்டிருந்தார்.
சாம்பாண் ஊருணி வளைவில் செல்லும் போது ரோட்டில் நின்ற சரக்கு வேன் மீது டூ வீலர் மோதியது. அதில் காயமடைந்த ஸ்டாலின் பிரபாகரன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு இறந்தார்.

