ADDED : ஜூலை 29, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி சங்கரா புரத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் மகன் பிரபாகரன் 40. இவருக்கு திரு மணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வந்தார்.
நேற்று வீட்டில் சிலிண்டர் தீர்ந்து விட்டதால் சிலிண்டர் எடுப்பதற்காக காஸ் கம்பெனிக்கு காரில் சென்றுள்ளார்.
காரில் சிலிண்டர் எடுத்துக்கொண்டு வந்த போது காரில் திடீரென்று கோளாறு ஏற்பட்டு, சாலையில் உருண்டு கவிழ்ந்தது. காரில் இருந்த பிரபாகரன் உயிரிழந்தார்.
குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.