/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலர் மீது பஸ் மோதல்; ஒருவர் பலி
/
டூவீலர் மீது பஸ் மோதல்; ஒருவர் பலி
ADDED : ஜன 30, 2024 11:48 PM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் முன்னால் சென்ற டூவீலர் மீது அரசு டவுன் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் 45, இவர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) உறவினர் தர்மர் 60, என்பவருடன் திருப்பாச்சேத்தி வழியாக மானாமதுரை சென்றார். கட்டனுார் விலக்கில் மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வாகுடி சென்ற அரசு டவுன் பஸ் பின்னால் வந்து மோதியதில் டூவீலரில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே தர்மர் உயிரிழந்தார். காயமடைந்த அறிவழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்பாச்சேத்தி போலீசார் பஸ் டிரைவர் மணிகண்டனிடம் விசாரிக்கின்றனர்.