/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து மேலும் ஒருவர் கைது
/
டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து மேலும் ஒருவர் கைது
டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து மேலும் ஒருவர் கைது
டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூன் 11, 2025 07:28 AM
திருப்புத்தூர்,: திருப்புத்தூர் சுண்ணாம்பிருப்பு விலக்கு ரோடு அருகே அரசு பஸ்சும், டூவீலரும் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியாகினார்.
திருப்புத்தூர் அருகே சோலுடையான்பட்டி சின்னகாளை மகன்கள் கூலி தொழிலாளிகளான மலைச்செல்வன் 40, நெவுலியப்பன்37. இருவரும் ஜூன் 8 அன்று டூ வீலரில் சென்ற போது சுண்ணாம்பிருப்பு விலக்கு ரோட்டிலிருந்து மதுரை ரோட்டிற்கு திரும்பும் போது, தேவகோட்டையில் இருந்து மதுரை க்கு சென்ற அரசு பஸ் டூவீலரில் மோதியதில், நெவுலியப்பன் பலியானார்.
காயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மலைச்செல்வன் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.