/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்வி உதவித்தொகை தருவதாக ஆன்லைனில் ரூ.1.32 லட்சம் மோசடி
/
கல்வி உதவித்தொகை தருவதாக ஆன்லைனில் ரூ.1.32 லட்சம் மோசடி
கல்வி உதவித்தொகை தருவதாக ஆன்லைனில் ரூ.1.32 லட்சம் மோசடி
கல்வி உதவித்தொகை தருவதாக ஆன்லைனில் ரூ.1.32 லட்சம் மோசடி
ADDED : ஆக 22, 2025 12:47 AM
சிவகங்கை,:மானாமதுரையில் பெண்ணிடம் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.1.32 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மானாமதுரையை சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது அலைபேசிக்கு கடந்த 19ல் இவரது மகன் படிக்கும் பள்ளியில் இருந்து பேசுவது போல் மர்மநபர் பேசியுள்ளார். அவர் அந்த பெண்ணின் மகனுக்கு கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகவும், அதனை அனுப்பி வைப்பதாக கூறி கியூஆர் கோடு அனுப்பி அதை ஸ்கேன் செய்ய கூறியுள்ளார்.
அதை செய்ததும் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.32 லட்சம் மற்றொரு கணக்கிற்கு பரிவர்த்தனை ஆகியுள்ளது. பின்னர் தான் ஏமாந்ததை உணர்ந்த அப்பெண் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மேல்விசாரணை நடக்கிறது.