ADDED : டிச 04, 2025 05:20 AM
சிவகங்கை: சிங்கம்புணரியை சேர்ந்த ஒருவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.64 ஆயிரம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர் 39 வயது இளைஞர். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆன்லைன் முதலீடு குறித்து ஒரு விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள இணையதள முகவரியை அவர் தொடர்பு கொண்டார்.
அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஆன்லைனில் எக்ஸ்போர்ட் டிரேடிங் என்ற இணையதள பக்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைத்தார். அதை நம்பிய அந்த 39 வயது இளைஞர் 3 தவணைகளாக ரூ.64 ஆயிரத்து 931 முதலீடு செய்தார். பணத்தை பெற்ற அந்த நபர் முதலீடு செய்ததற்கான லாபத்தொகையை கொடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

