ADDED : பிப் 01, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மானாமதுரையை சேர்ந்தவர் ஏழுமலை 45. இவரது அலைபேசியில் அடையாளம் தெரியாத ஒருவர் லோன் தருவதாககூறியுள்ளார். அவர் பேச்சை நம்பி ஏழுமலையும் பேசியுள்ளார்.
ஏழுமலையிடம் ரூ.4 லட்சம் லோன் தருவதாகக் கூறிய அவர் லோன் அனுமதி, டாக்குமென்ட் செலவு, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவைக்கு முன்தவணையாக பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.
ஏழுமலை அவர் கூறிய எண்ணுக்கு 6 தவணைகளாக ரூ. 63 ஆயிரத்து 502 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் மேலும் பணம் அனுப்புமாறு ஏழுமலையிடம் கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த ஏழுமலை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.