/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுற்றுச்சுவர் உடைந்ததால் ஊருணி தண்ணீர் மாசு
/
சுற்றுச்சுவர் உடைந்ததால் ஊருணி தண்ணீர் மாசு
ADDED : ஜூன் 30, 2025 06:08 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சுற்றுச் சுவர் சரிந்ததால் ஊருணி தண்ணீர் மாசுபட்டு வருகிறது.
இவ்வொன்றியத்தில் மு.சூரக்குடி ஊராட்சியில் செம்மணிப்பட்டி ரோட்டில் படைத்தலைவி நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பாக உள்ள பழமையான ஊருணியின் தடுப்புச் சுவர் உடைந்து கற்கள் பெயர்ந்து கிடக்கிறது.
இந்த ஊருணி தண்ணீரை தான் இப்பகுதி மக்கள் குடிநீராகவும் கோயில் பூஜைக்கும் பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சுவர் உடைந்து காணப்படுவதால் கரைகளில் இருந்து கழிவு நீர், குப்பை, அசுத்தம் ஊருணியில் கலக்கிறது. இதனால் ஊருணி தண்ணீர் மாசுபடுகிறது. சுற்றுச்சுவரை சீரமைக்க இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.