/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் வணிக வளாகம் திறப்பு
/
மடப்புரத்தில் வணிக வளாகம் திறப்பு
ADDED : நவ 13, 2024 09:29 PM
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் வணிக வளாகம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி, வாகனங்களை நிறுத்த கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். மடப்புரத்தில் நடந்த விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
விழாவில் கலெக்டர் ஆஷாஅஜித், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, துணை ஆணையர் சங்கர், உதவி ஆணையர் ஞானசேகரன், எம்.எல்.ஏ., தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயமூர்த்தி, பி.டி.ஓ பாலசுப்ரமணியன், மடப்புரம் ஊராட்சி தலைவர் சபர்மதி பங்கேற்றனர். மடப்புரம் கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன் நன்றி கூறினார்.

