/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் மணி மண்டபம் திறப்பு
/
சிங்கம்புணரியில் மணி மண்டபம் திறப்பு
ADDED : நவ 16, 2025 04:18 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மறைந்த முன்னாள் அமைச்சர் செ.மாதவன் மணிமண்டபம் திறக்கப்பட்டது.
முதல்வராக அண்ணாதுரை, கருணாநிதி இருந்த போது அவரது அமைச்சரவையில் சிங்கம்புணரியை சேர்ந்த செ.மாதவன் இடம் பெற்றார்.
பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியையும் நிறுவி நடத்தி வந்தார். அப்பள்ளி வளாகத்தில் மாதவனுக்கு, அவரது குடும்பத்தினர் சார்பில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்தது. பள்ளி தலைவரும், மாதவனின் மகளுமான வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். மணிமண்டபம்,மாதவனின் சிலையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மகேஷ், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், மாதவன் குடும்பத்தினர், பாரிவள்ளல் அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை உதயநிதி வழங்கினார்.

