/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைகிராமத்தில் பள்ளிவாசல் திறப்பு மும்மதத்தினர் பங்கேற்பு
/
சாலைகிராமத்தில் பள்ளிவாசல் திறப்பு மும்மதத்தினர் பங்கேற்பு
சாலைகிராமத்தில் பள்ளிவாசல் திறப்பு மும்மதத்தினர் பங்கேற்பு
சாலைகிராமத்தில் பள்ளிவாசல் திறப்பு மும்மதத்தினர் பங்கேற்பு
ADDED : ஜன 22, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைகிராமம்: சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தில் நடந்த 100 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் திறப்பு விழாவில் மும்மதத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
புனரமைக்கப்பட்ட இப்பள்ளிவாசல் திறப்பு விழாவிற்காக ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து அனைத்து தெருக்களிலும் வரவேற்பு பேனர்கள் வைத்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.
திறப்பு விழாவிற்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கு ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஜூஸ், மோர் வழங்கி வரவேற்றனர். அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி உணவு பரிமாறப்பட்டன.