ADDED : நவ 30, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடி ஆனந்தா நகரில், குடியிருப்பு மாடியில் தனியார் அலைபேசி நிறுவனம் சார்பில் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உரிய அனுமதி பெறாமல் டவர் அமைப்பதாகவும், பணியை கைவிடவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பணியை தற்காலிகமாக நிறுத்தியதோடு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

