/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி வளாகத்தில் அலுவலகம் இடமாற்றம் செய்ய உத்தரவு
/
பள்ளி வளாகத்தில் அலுவலகம் இடமாற்றம் செய்ய உத்தரவு
ADDED : மே 08, 2025 03:14 AM
சிவகங்கை: அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளின் வளாகங்களில் முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள கல்வி அலுவலகங்களை உடனடியாக வேறு வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.அதற்கு பொதுப்பணித் துறை அறிவுறுத்தும் வாடகையை நிர்ணயம் செய்து உரிய கருத்துருவை மே, 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று துறையின் செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.