sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காலாவதியான பஸ்களை இயக்குவதால்; நடுவழியில் இறக்கி விடப்படுவதால் தவிப்பு

/

காலாவதியான பஸ்களை இயக்குவதால்; நடுவழியில் இறக்கி விடப்படுவதால் தவிப்பு

காலாவதியான பஸ்களை இயக்குவதால்; நடுவழியில் இறக்கி விடப்படுவதால் தவிப்பு

காலாவதியான பஸ்களை இயக்குவதால்; நடுவழியில் இறக்கி விடப்படுவதால் தவிப்பு


ADDED : பிப் 16, 2025 06:58 AM

Google News

ADDED : பிப் 16, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் 22,509 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 1.40 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலானஅரசுப் பஸ்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. தமிழகத்தில் பெரும்பாலான அரசுப் பஸ்கள் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், காலாவதியான பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

அரசு பஸ்களை முறையாக பராமரிக்கப்படாததாலும், பாதுகாப்பு இல்லாததாலும் பயணிகள்தனியார் பஸ்களை விரும்புகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. காரைக்குடி மண்டலத்தில்சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 அரசு பணிமனைகள் உள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 102 டவுன் பஸ்களும் ராமநாதபுரத்தில் 200 டவுன் பஸ்களும், 300க்கும் மேற்பட்ட விரைவு பஸ்களும் இயக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மிகவும் பழமையான பஸ்கள். இந்த பஸ்கள் அடிக்கடி நடுவழியில் நின்று விடுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கம்புணரி பகுதியில் மேடான இடத்தில் ஒரு பஸ்சில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை இயக்கும் வீடியோ வலைதளங்களில் பரவியது. மழைக்காலங்களில் பஸ் முழுவதும் மழை தண்ணீர் ஒழுகி பயணிகள் குடை பிடிக்கும் வீடியோக்களும் பரவியது.

அதேபோல் மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் செல்லக்கூடிய பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்கிறது. இதனால் அவசரத்திற்கு பஸ்சில் செல்பவர்கள் மிகுந்த அவதி படுகின்றனர். எனவே தமிழக அரசு இவற்றை கருத்தில் கொண்டு 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டு காலாவதியான ஆனால் பராமரித்து இயக்கப்படும் பஸ்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய பஸ்களை மாவட்டத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிரைவர், கண்டக்டர்கள் கூறுகையில், அரசு போக்குவரத்து காரைக்குடி மண்டலத்தில் 14 பணிமனைகளில் 600க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.

1000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இருந்த போதிலும் இரவு பகல் பாராமல் பணி செய்கிறோம். ஆனால் காலாவதியான பஸ்களை பராமரித்து இயக்கப்படுவதால் அச்சத்துடன் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. எப்போது பஸ் நிற்கும் என்ற பயத்தில் பஸ்சை இயக்க வேண்டி உள்ளது.

முடிந்த வரை முறையாக பராமரிக்கப்பட்ட பஸ்களை தான் இயக்குகிறோம். பழைய பஸ்களுக்கு மாற்றாக 100க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள்மாவட்டத்திற்கு வரவேண்டியுள்ளது. காலி பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us